பிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry?.... யார் யார்னு தெரியுமா?

Report
2694Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி என நான்கு பேர் வெளியேறியுள்ளனர்.

கஸ்தூரி மற்றும் வனிதா வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். தற்போது இன்னும் இரண்டு பிரபலங்கள் இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒருவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா என்றும் மற்றொருவர் அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மாடல் பூர்ணிமா என்பவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றும், நாளையும் ஒரு Wild Card Entry இருக்குமோ? என்ற கேள்விக்குறியில் மக்கள் காத்திருக்கின்றனர்.


loading...