கோடியில் மிதக்கும் ரொனால்டோ இன்று வரை பச்சை குத்தாமல் இருக்க இது தான் காரணம்?

Report
1075Shares

உலக கால்பந்து அரங்கில் வீரர்களில் ‘நம்பர் வன்’ கதாநாயகனாக ஜொலிக்கிறார் ரொனால்டோ. உலகில் தற்போதைய ‘நம்பர் வன்’ கால்பந்து வீரர் யார் என்பதில் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) இடையே எப்போதும் போட்டி காணப்படும்.

றிஸ்டியானோ ரொனால்டோ 1985 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பிறந்தார். கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவராவார்.

இவர் மான்செஸ்ரர் யுனைரட் கழகத்திலிருந்து ரியல் மட்றிட்காக மாறிவந்த பொழுது இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

அது மட்டுமன்றி இவர் ரியல் மட்றிட்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 6 வருடங்களுக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்ரின் சிபி என்ற கழகத்தில் விளையாடும் பொழுது மன்செஸ்ரர் அணியின் நிர்வாகியான அலெகடஸ் பெர்கஸன் என்பவரால் இனங்காணப்பட்டு 18 வயதே நிரம்பிய இவரை 12.24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு மன்செஸ்ரறில் விளையாடுவதற்காக ஒப்பந்தமிடப்பட்டார்.

பின்பு யூரோ 2004ல் முதன் முதலாக போர்த்துகீச அணிக்காக விளையாடுவதற்குக் களமிறக்கப்பட்டார். போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் 15.09.2013 அன்று தொடர்ந்து "எசுப்பானியா" நாட்டின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் கிளப்பின் தலைவர் புளோரின்டினா பெரெஸ்சும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.

இதன் மூலம் இவருக்கு ஆண்டுக்கு 143 கோடிகள் வருமானம் கிடைத்தது. ஏழ்மை நிலையில் இருந்து உயர்ந்துள்ள ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு ரசிகர்களுக்கு கற்று கொடுக்கும் அனுபம் விலைமதிக்க முடியாத ஒன்று.

11 வயதாக இருக்கும் போது தந்தையின் இழப்பு, ரொனால்டோவின் தாயார் குழந்தைகளை வளர்க்கபட்ட கஷ்டங்கள், கால்பந்து வீரராக உருவானவிதம், மான்செஸ்டர் யுனைடெட்டில் ரொனால்டோ சந்தித்த சவால்கள், ரியல்மாட்ரிட்டில் இணைந்த விதம், மெஸ்ஸியினால் ரொனால்டோவின் புகழுக்கு வந்த நிலைமை என அனைத்தும் நிச்சயம் மிகவும் சுவாரஷ்யம் நிறைந்த ஒன்றாக இருக்கும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ பல பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். அதில் முக்கியமானவர் மாடல் அழகி இரியான சைக். தற்போது, ரொனால்டோவுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதில், முதல் மகனின் தாயைப் பற்றிய விவரத்தை ரொனால்டோ யாருக்கும் இதுவரை தெரிவிக்க வில்லை. அடுத்ததாக, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தை ஆனார்.

அதன் பின் தனது காதலி ஜார்ஜியானா ராட்ரீகஸ் மூலம் மற்றொரு பெண் குழந்தைக்கு தந்தை ஆனார்.

சிறுவயதில் போர்ச்சுகல் தெருக்களில் கால்பந்து விளையாடிய ரொனால்டோ, இன்று அந்த சாலைகளிலேயே தனக்கு சிலை வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அவரின் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

பல்வேறு நல்ல காரியங்களுக்காக தானம் வழங்கியுள்ள ரொனால்டோ, ஆண்டுதோறும் தனது ஊரில் இரத்ததானம் செய்து வருகிறார். இதற்காகவே, தனது உடலில் பச்சைக் குத்துவதை அவர் தவிர்த்துள்ளார். சுனாமி, நேபாளம் பூகம்பம், குழந்தைகள் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்களுக்காக நிதியுதவி செய்துள்ளார்.

பல்வேறு மொழி, இனம், மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பது விளையாட்டு. அதிலும் கால்பந்திற்கு பெருவாரியான ரசிகர்கள் உண்டு.

40876 total views
loading...