அனல் பறக்கும் ஓட்டிங்! முதல் இடத்தில் சாண்டியா ? தர்ஷனா? இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா?

Report
2105Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவு கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். நடந்து முடிந்த நாமினேஷனில் இதுவரை எந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார்.

அவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். மற்ற போட்டியாளர்கள் அதிக வாக்குகளை போராடி தான் பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

முதல் நாளில் இருந்து ஒட்டிங்கில் முதல் இடத்தை பிடிப்பதில் தர்ஷன் மற்றும் சாண்டி இருவருக்கும் தான் அதிக போட்டி நிலவி வருகிறது. அதில் ஆரம்பம் முதலே சாண்டி தான் முதல் இடத்தில் இருந்தார். தற்போது தர்ஷனுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதுவரை நடந்து வந்த ஓட்டிங்கில் கஸ்தூரிக்கு தான் மிகவும் குறைந்த வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதனால் அவர் இந்த வாரம் வெளியேற்றபடுவார் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி wildcard போட்டியாளராக களமிறங்கினார்.

எப்போதும் சமூகவலைதளத்தில் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் காமடி பீஸாக மாறிவிட்டார். இந்த நிலையில், இவரை சீக்ரெட் ரூமில் வைத்தால் அவரின் சுய ரூபம் வெளியில் வரலாம் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

இதேவேளை, இது வரை ரசிகர்களின் கருத்து கணிப்பிடின் படி தர்ஷனுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் சாண்டி மற்றும் தர்ஷனுக்கு அதிக போட்டி இடம்பெற்றது.

இவர்கள் இருவரும் இறுதி போட்டியாளர்களாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.


loading...