பிக்பாஸ் கதவை உடைத்து இதை செய்ய வேண்டும்! பிரபல இயக்குனர் காட்டம்

Report
331Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமூகத்திற்கு எந்த பலனுமில்லை என காட்டமாக விமர்சித்துள்ளார் இயக்குனரும், நடிகருமான அமீர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது எனக்கு பிடிக்காது, சேரன் இருக்கிறார் என்பதற்காக அவர் வந்த காட்சிகளை மட்டும் பார்த்தேன்.

ஆட்டோகிராப் படம் வெற்றியடைந்ததும் கல்லூரி நிகழ்வொன்றில் சேரன் கலந்து கொண்ட போது, 2000 பேர் எழுந்து நின்று கைதட்டினர், பிரம்பிப்புடன் அவரை பார்ப்பேன்.

இன்று பிக்பாஸில் அவரது நிலையை பார்க்கும் போது, கதவை உடைத்துக் கொண்டு அவரை வெளியே தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது.

அந்நிகழ்ச்சியால் சமூகத்திற்கு ஒரு பலனும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

12369 total views