குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.
சிறு வயதிலேயே நடிக்க வந்ததால், 8ம் வகுப்பிலேயே நின்று விட்டாராம். அதன் பிறகு தனியாக கோச்சிங் சென்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
நடித்துக்கொண்டே திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக வரலாற்றுப் பிரிவில் பட்டமும் பெற்றுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார்.
தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று அசத்தியவருக்கு, நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது.
இவரும் விஜய் படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களின் செல்லமாகிவிட்டார் என்றே கூறலாம்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடிகை மீனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில் விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என தெரிகிறது.