காப்பாற்றப்படுகிறார் லொஸ்லியா? பிக்பாஸின் பலே திட்டம்

Report
1697Shares

50 நாட்களை கடந்து விட்ட பிக்பாஸில் நாளுக்கு நாள் களேபரங்களாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்த வார நாமினேஷனில் இருந்து லொஸ்லியா காப்பாற்றப்படுவார் என தெரிகிறது.

இந்த வாரம் ஓட்டிங்கில் சேரன் மற்றும் கஸ்தூரிக்கே குறைவான வாக்குகள் வந்துள்ளதால், இருவரில் ஒருவர் ரகசிய அறையில் வைக்கப்படலாம்.

கடந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்கில், சேரன், சாண்டி மற்றும் லொஸ்லியா சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தர்ஷன் மற்றும் முகேனை விட லொஸ்லியா சிறப்பாக செய்யவில்லை என்றாலும் அவரை தெரிவு செய்துள்ளார்கள்.

இவர்கள் மூவரும் அடுத்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிடலாம் என பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

எப்படியும் லொஸ்லியாவுக்காக சாண்டி மற்றும் சேரன் விட்டுக்கொடுப்பார்கள் என்பதே அனைவரின் கணிப்பு, எனவே லொஸ்லியா அடுத்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படலாம்.

64069 total views
loading...