திடீரென்று நின்று போன நடிகர் விஷாலின் திருமணம்! கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Report
639Shares

நடிகர் விஷாலின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகளான அனிஷாவுக்கும் நடிகர் விஷாலுக்கும் அக்டோபர் மாதம் 9ம் திகதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, நிச்சயதார்த்தத்துடன் இந்த ஜோடிகளின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களது திருமணம் நின்று போனதற்கான சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், மணமகளான அனிஷா, அவருடைய சமூக வலைத்தள கணக்கிலிருந்து நடிகர் விஷாலுடன் இணைந்து எடுத்திருந்த அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

22463 total views