பிக்பாஸ் வீட்டில் உள்ள கமெராக்கள் விலை எவ்வளவு தெரியுமா? இத்தனை இடங்களில் உள்ளதா? அதிரவிடும் பிக்பாஸ்..!

Report
205Shares

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை காணாத ஆட்களே இல்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் அனைத்தையும் நம் கண்களுக்கு நேரடியாகக் காட்டும் கமெராக்களை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதற்காக பிக்பாஸ் குழு எவ்வளவு செலவு செய்துள்ளது என்று தெரியுமா? வாங்க நாங்கள் சொல்கிறோம்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் குழு 3 அதிநவீன கமெரா வகைகளை இந்த வீட்டிற்குள் அனைத்து இடங்களிலும் பொருந்தியுள்ளது. இவை ஒவ்வொன்றும் அதிநவீனமான கமெராக்கள், குறிப்பாக விலை உயர்ந்த கமெராக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று கமெரா வகைகளில் இரண்டு கமெரா வகைகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய கமெராக்கள், மற்றொரு வகை கமெரா சாதாரணமாக எச்.டி தர கமெரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோனி கமெரா

  • இந்த Sony BRC H900 என்ற அதிநவீன கமெரா ஜாய்ஸ்டிக் கண்ட்ரோலர் மூலம் இயக்கக்கூடியது.
  • சுமார் 180 டிகிரி வரை கவர் செய்ய முடியும், இந்திய மதிப்பின் சுமார் 9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 47 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்த Sony EVI D70 கமெரா முன்பு பார்க்கப்பட்ட அதிநவீன கமெரா உடன் ஒப்பிடுகையில் ஒரு சராசரியான கமெரா தான், ஆனால் இந்த வகை கமெராவும் ரிமோட் கண்ட்ரோலர் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய அதிநவீன கமெராக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த கமெராவின் இந்திய மதிப்பு சுமார் ரூ.77,000 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை கமெராக்கள் பிக்பாஸ் இல்லத்திற்குள் சுமார் 17 பொருத்தப்பட்டுள்ளது.

கோ-ப்ரோ (Gopro)

இந்த வகை கமெராக்கள் பிக்பாஸ் இல்லத்திற்குள் மூன்றே மூன்று இடங்களில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. ஆண்கள் அறை, ஜெயில் மற்றும் ஸ்மோக்கிங் ஏரியாவில் இந்த கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை கமெராவின் விலை இந்திய மதிப்பில் வெறும் ரூ.33,000 மட்டுமே. இந்த வகை கமெராக்களில் மூன்று கமெராக்கள் மட்டுமே பிக்பாஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்தமாக பிக்பாஸ் இல்லத்திற்குள் சுமார் 67 கமெராக்கள் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 67 கமெராக்களுக்காக மட்டும், பிக்பாஸ் குழு சுமார் 4 கோடியே 37 லட்சம் செலவழித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கமெராக்களில் நைட் விஷன் மோடும் இருப்பதனால் யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, முக்கியமாக எந்த ஒரு விஷயம் செய்தாலும் இந்த கமெராவில் தெளிவாக காட்டிவிடும்...

8649 total views