பிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..!

Report
2679Shares

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் நடிகை சுஜா வருணி பிரபலமானர். இவர் பல விளம்பர படங்களிலும், ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தன்னையார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளியேறுதும், இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராஜ்குமாரின் மகன் சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் கர்ப்பமான சுஜா வருணிக்கு நேற்றைய தினத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கணவர் “ என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான். இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. இதே நாளில் தான் நான் நடித்துள்ள fingertrip என்ற வெப் தொடரும் ஆரம்பமாக இருக்கிறது”. என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

loading...