மீண்டும் காதல் லீலைகளை ஆரம்பித்த கவின்.. கொஞ்சி கொஞ்சி பேசும் லொஸ்லியா..!

Report
360Shares

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே அனைத்து போட்டியாளர்களுக்கும் சண்டையையும், அழுகையையும் மட்டுமே தான் அதிகம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், போட்டியாளர்களுக்கு சமீபத்தில் ஸ்கூல் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கின் போது கஸ்தூரி மற்றும் வனிதாவிற்கு சண்டை ஒன்று வெடித்து இருந்தது. அதில், வனிதாவை கஸ்தூரி வாத்து என்று கூறியதால் வனிதா சண்டையை ஆரம்பித்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், கவின் மற்றும் லொஸ்லியாவின் காதல், ரொமான்ஸ் மட்டும் குதூகலமாக தான் போய் கொண்டு இருக்கிறது.

சாக்க்ஷி இருந்த வரை அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆள் இல்லாமல் போனதால், ரொமான்ஸை மறுபடியும் இரவு வேளையில் பேசி வருகிறார்கள்.

தற்போது லொஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று டாஸ்கை எல்லாம் முடித்துவிட்டு லொஸ்லியா மற்றும் கவின் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது கவின், இங்கே இருக்கவே பிடிக்கவில்லை என்றதும் ஏன் என்று கேட்டார் லொஸ்லியா.

அதற்கு கவின், நினைச்சத பண்ணவும் முடியால செய்யவும் முடியல, ஒரு வேலை அப்படி ஆகிடுச்சு என்றால் எல்லாம் சரியாகிவிடும் அது இல்லாம, எல்லாம் ஒரு மாதிரி போய்ட்டு இருக்கு. அதற்கு ஏற்றார் போல நீயும் ஒரு மாதிரி பண்ற என்று கூறினார்.

ஆனால், அதற்கு லொஸ்லியா நீ சும்மா, சும்மா சண்டை பிடிக்கிறதுக்கே இதை பேசிட்டு இருக்கே என்று பேச, கவின் அப்படி பண்ண மட்டும் என்னா பண்ண போறீங்க சும்மா தானா இருக்க போறீங்க என்று கேட்டுள்ளார்.

அதன் பின் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றனர், இதையெல்லாம் பார்த்தால் கவின்- லொஸ்லியா காதல் கன்பார்ம் தான் போல என்கின்றனர் நெட்டிசன்கள்.

13822 total views