பிக்பாஸில் மதுமிதாவின் ஒருநாள் சம்பளம் என்ன தெரியுமா? பொலிசில் புகார் அளித்த விஜய் டிவி

Report
1546Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பிரபல ரிவியின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் மதுமிதா போட்டியாளராக பங்கேற்றார்.

சக போட்டியாளர்களுடனான பிரச்சினையில் மனமுடைந்த மதுமிதா தனது கையினை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

போட்டியின் விதிகளை மீறியதாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக கடந்த சனிக்கிழமை வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டின் 50-வது நாளில் ஏற்பட்ட இந்த பிரச்சினை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

ஒப்பந்தத்தின் படி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுமிதா 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மீதமுள்ள தொகையான ரூ.32 லட்சத்தை இரண்டு நாட்களில் திருப்பி தரவேண்டுமென(ஒருநாளைக்கு ரூ.80 ஆயிரம்) கடந்த 19ம் திகதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மொபைலுக்கு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பியதாகவும், பணம் வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகாருக்கு பதிலளித்த மதுமிதா, சட்டரீதியாக பிரச்சனையை கையாண்டு வருவதாகவும், தற்போதைய நிலையில் வேறெதும் கூற முடியாது எனவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

65114 total views