அதை பற்றி மட்டும் பேசாதீங்க... முதன்முறையாக கண்ணீருடன் சரவணனின் பேட்டி

Report
626Shares

பிக்பாஸ் வீட்டிலிருந்து எதிர்பாராத தருணத்தில் வெளியேற்றப்பட்ட சரவணன் சமீபத்தில் கலைமாமணி விருதினை பெற்றார்.

இதுகுறித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் எவ்வாறு இருக்கிறேன் என்பதைக் குறித்தும் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

கலைமாமணி விருது கிடைத்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை கூறி ஆரம்பித்த தனது பேட்டியில், சமீபத்தில் அத்தி வரதர் கோவிலுக்குச் சென்றதாகவும் அங்கு மக்கள் எனக்கு கொடுத்த மரியாதையையும், என்னுடன் புகைப்படம் எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வந்ததையும் அவதானித்தேன். வெறும் 40 நாட்களில் எனது வாழ்வில் இப்படியொரு மாற்றமா? என்று கேள்வி ஏற்பட்டதோடு, பிக்பாஸ் வீட்டில் தான் உண்மையாகவும், உண்மையை மட்டும் பேசியதால் கிடைத்த ரசிகர் கூட்டமே இது என்று தெரிவித்துள்ளார்.

பின்பு தனது தாய், தந்தையைக் குறித்து பேசுகையில், கண்கலங்கிய சரவணன் தந்தையின் உருவத்தினை சிலையாக வடித்துள்ளதாகவும், புதிதாக கோவில் ஒன்றினை கட்டியுள்ளதாகவும் கூடிய விரைவில் அதற்கு பிரதிஷ்டை நடைபெறும் என்று கூறிவிட்டு ப்ளிஸ்... அதை பற்றி பேச வேண்டாமே என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது பள்ளிப்பருவத்திலேயே தனக்கு கடவுள் நம்பிக்கை, ஜாதகம் இதில் அதீத நம்பிக்கை உண்டு தெரிவித்த அவர், 96-ல் டி. ராஜேந்திரன் சார் எனது ஜாதகத்தினை அவதானித்ததாகவும், 46 வயதிற்கு மேல் தான் எனக்கு நல்ல வாழ்க்கை இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது தனக்கு 27 வயது தான் ஆகிக்கொண்டிருந்தது. அவர் கூறியது மட்டுமின்றி பல இடங்களில் ஜாதகம் பார்த்த போதும் இதை மட்டுமே கூறினார்கள் என்று தெரிவித்தார்.

பின்பு தனக்கு கிடைத்த இரண்டு மனைவிகளைக் குறித்தும் பேசிய அவர், இரண்டு பேரும் எனக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். எனது உடன்பிறப்புகள் பேசிய பேச்சிற்கு தக்க பாடம் புகட்டும் விதமாக எனக்கு ஆண் குழந்தையை பெற்றுக்கொடுத்துள்ளார் எனது இரண்டாவது மனைவி என்று தெரிவித்துள்ளார்.

27398 total views
loading...