மதுமிதாவின் கையை பார்த்து அதிர்ச்சியடைத்த டேனி... வெளியிட்ட பல ரகசியங்கள்!

Report
1350Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவின் தற்கொலை முயற்சி குறித்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் டேனி பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டைப் பொறுத்தளவில் அனைத்தும் ஸ்கிரிப் கிடையாது உண்மையில் அங்கு நடப்பதெல்லாம் அன்றாடம் நடப்பது தான் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைக் குறித்து பிரபல ரிவியினை எந்தவொரு சூழ்நிலையில் தவறான பெயரோ, குற்றச்சாட்டோ வைக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்ட உறுதி பத்திரத்தில் போடப்பட்டுள்ளது.

இதனை மீறி வெளியே கூறினால் சட்டத்தின் மூலமாக ஆக்ஷன் எடுக்கப்படும் என்று கூறிய டானி அவரது உறுதி பத்திரத்தினையும் காட்டியுள்ளார். மேலும் இதனை மீறி பிக்பாஸ் வீட்டில் நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை உண்டு... பொருட்களை சேதப்படுத்தினால் 50,000 முதல் 50 லட்சம் வரை பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போது மது தன்னிடம் பிரச்சினை குறித்து பேசினார். அதனை நான் இப்போது வெளிப்படையாக கூற முடியாது. அதற்கான நேரம் வரும் பொழுது மதுமிதாவே இதுகுறித்து விபரமாக கூறுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் மதுமிதாவிற்கு பிரபல ரிவியிலிருந்து வர வேண்டிய தொகை வந்த பின்னரே அவர் வாய் திறப்பார் என்று கூறினார்.

திடீரென மதுமிதாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு சென்ற டேனி படுபயங்கரமான அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்.

அவரது கைகளில் ஏராளமான கீரல்கள் மிகவும் ஆழமாக இருந்ததாகவும், அவ்வளவு தூரம் காயப்படுத்தும் அளவிற்கு பிக்பாஜும், சக போட்டியாளர்களும் தடுக்காததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை... பிரபல ரிவி மதுமிதாவை வீட்டிற்கு வந்து கூட பார்க்கவில்லை என்று டேனியல் கூறியுள்ளார்.

சேரன், கஸ்தூரியை மட்டும் அவர் கூறியதற்கு காரணம் கஸ்தூரி மட்டுமே எனது கையில் ரத்தம் கொட்டும் நேரத்தில் ஈரத்துணியைக் கட்டினார்... எனது உயிரைக் காப்பாற்றிய நபரைத் தானே நான் கூற முடியும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இத்தருணத்தில் வனிதா பின்னே அமர்ந்துகொண்டு நக்கலாக பேசியுள்ளதாகவும், ஆக்டிங் அதெல்லாம் ஒன்றும் நடக்காது... இதுமாதிரி நிறைய பார்த்திருக்கோம்... ஓவரா சீன் போடுது என்று வனிதா கூறியதாக மது டேனியலிடம் கூறியுள்ளார்.

ஹலோ ஆப் டாஸ்க் பிரச்சினையில் கர்நாடக பிரச்சினை எடுத்துப் பேசியதால் தானா என்ற கேள்விக்கு மதுமிதா தான் வாய் திறக்க வேண்டும் என்று கூறியுள்ள டேனி இது 90% உண்மை என்பதே எனக்குத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

மதுமிதா இன்னும் வாய்திறக்காததற்கு காரணம் பிரபல ரிவி அவருக்கு உத்தரவு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

38635 total views
loading...