வேலியை தாண்டி எகிறி குதித்த முதலை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..!

Report
315Shares

முதலை ஒன்று ராணுவ பயிற்சி மையம் அருகே உள்ள வேலியை தாண்டி குதித்து உள்ளே செல்லும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஜாக்ஸன்வில் பகுதியில் செயல்பட்டு வரும் கடற்படை பயிற்சி மையத்தில், இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. இந்த வேலியை அங்கு வந்த முதலை ஒன்று, மிக சாதரணமாக ஏறி மறுபக்கம் குதித்துச் சென்றது.

பொதுவாக முதலைகள் நீரில்தான் இப்படி இருக்கும். இந்த காட்சியில் இருக்கும் வேலி முதலையின் உயரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் உள்ளது. முதலை ஏறிக் குதிக்கும் காட்சியை அங்குவந்த கிறிஸ்டினா ஸ்டீவார்ட் என்பவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

10955 total views