பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..!

Report
1505Shares

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி மற்றும் அபிராமி இருவரும் நேரில் சந்தித்து கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி முதலில் தான் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தை பார்த்தார். திரையரங்கில் அஜித் ரசிகர்கள் பலருடன் செல்பி எடுத்து கொண்ட அபிராமி, அதன்பின் பிக்பாஸ் வீட்டில் இருந்து இதற்கு முன் வெளியேறிய ஒருசில போட்டியாளர்களை பார்த்துள்ளார். குறிப்பாக மோகன் வைத்யா வீட்டிற்கு அபிராமி சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இணைபிரியாத தோழிகளாக இருந்த சாக்சியை சந்தித்த அபிராமி, அவருடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து அதில், செஸ்க்கி... பாப்பா பாடும் பாட்டு வெளியேறியதற்கு பிறகு இவரை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது. முன்னதாக அபிராமி நேற்று தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

38465 total views