பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..!

Report
3158Shares

பிக்பாஸ் நிக்ழ்ச்சியிலிருந்து கடந்த ஞாயிற்று கிழமை வெளிவந்த அபிராமி மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவந்த அபிராமி கடந்த வாரத்தில் முகேனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மக்களின் வெறுப்பை சந்திக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக வனிதா வீட்டிற்குள் சென்ற நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் பல பிரச்சனைகள் மீண்டும் பெரிய அளவில் வெடித்தது.

இந்நிலையில், கடந்தவாரத்தில், மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததற்கு ஆண்கள் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வர ஆரம்பித்தன.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிலுருந்து கடந்த வாரம் வெளியேறிய அபிராமியிடம் மதுமிதா உங்களை சிறையில் போட்டதற்காக தான் ஆண்களிடம் சண்டை போட்டார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் மதுமிதா உங்களுக்காக தான் பேசினார். ஆனால், அவருக்காக நீங்கள் தான் நிற்கவில்லை என்று கேட்டுள்ளார்.

இதற்கு விளக்கமளித்த அபிராமி, மது ஒரு குழந்தை சட்டென்று அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் எதுவும் தெரியாமல் கொஞ்சம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார் அபிராமி.

மேலும் நான்தான் சேரன் மற்றும் கஸ்தூரியுடன் அவரை கன்பெஷன் ரூமுக்கு அனுப்பி வைத்தேன் இங்கே அனைத்தையும் கூறுவதற்கு நான் இல்லை. இது மிகவும் சர்ச்சையான விஷயம் இதை பற்றி யாரும் பேச வேண்டாம். நாங்கள் மதுவை எந்தவிதத்திலும் காயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

104272 total views