மதுமிதா தற்கொலை முயற்சிக்கு பொலிஸ் விசாரணை!.. பிரபலத்தை வச்சி செய்யும் நெட்டிசன்கள்

Report
379Shares

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சித்ததாக கூறி நிக்ழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர் மதுமிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவர் பிக்பாஸ் வீட்டில், கர்நாடகா குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகவும், அதனால் பிக்பாஸ் இவரை கண்டித்தாகவும் செய்திகள் வெளியாகியது.

இதனால், இவர் பிக்பாஸ் வீட்டின் தலைவராக தகுதி இல்லை, என போட்டியாளர்கள் இவரை விமர்சித்ததாகவும், இதனால் தான் இவர் தற்கொலை முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில், மதுமிதா தற்கொலை முயற்சித்தது குறித்து போலீஸ் விசரனை நடத்த வேண்டும் என்று நடிகர் எஸ் வி சேகர் ட்வீட் செய்துள்ளார்.

அதில், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு அவர், கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா. ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை என்று பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், எஸ்.வி.சேகரை பயங்கரமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.