பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி செய்த முதல் வேலையை பாருங்க... வைரலாகும் வீடியோ..!

Report
816Shares

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் வெளியேறிய அபிராமி தனது ரசிகர்களுடன் தான் நடித்த படமான நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்த படத்தில், பிக்பாஸ் வீட்டிலிருந்த அபிராமியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், படம் வெளியான சமயத்தில், இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்ததால், படத்தை பார்க்காமல் இருந்த அபிராமி கடந்த ஞாயிற்றுகிழமை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளிவந்த பின்பு தனது ரசிகர்களுடன் சென்று மகிழ்ச்சியுடன் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

மேலும், ரசிகர்கள் பலருடன் அவர் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அபிராமி 'வேறென்ன வேண்டும்.. என் தமிழா. தமிழச்சி நன்றி நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.


23299 total views