3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..! ஏன் தெரியுமா?

Report
818Shares

தமிழ் சினிமாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு மிஸ்டர் ரோமியோ படத்தில் இயக்குநர் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை ஷில்பா செட்டி.

இவர் குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஏராளமான படங்களிலும் நடித்து பெருமளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் உடல் எடை குறைக்கும் மாத்திரைகள், பவுடர்கள் குறித்த விளம்பரத்திற்கு நடிக்குமாறு ஷில்பாசெட்டியிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு ஷில்பா மறுப்பு தெரிவித்துள்ளார். 10 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், ஒரேயடியாக, மறுப்பு தெரிவித்த ஷில்பா செட்டி, உடல் எடை குறைப்பது என்பது மனம் மற்றும் உடல் நலம் சமபந்தபட்டது. முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே உடல் எடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு. மாத்திரைகள் ஆரம்பத்தில் உடல் எடையை குறைத்து பின்விளைவுகளை ஏற்படுத்தகூடியது.இந்த விளம்பரத்தில் நடித்து மக்களின் உடல் நலத்தோடு நான் விளையாட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

29496 total views