ஒருவார்த்தை கூட பேசாத கமல்! மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்?

Report
882Shares

பிக்பாஸ்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, அதிலும் அந்நிகழ்ச்சியை விமர்சித்துக் கொண்டே பார்ப்பவர்கள் ஏராளம் என்று கூட சொல்லலாம்.

கடந்த இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசனில் சர்ச்சைகள் மற்றும் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாமல் போனது.

முதல் நாளிலேயே ஆர்மி, பார்த்ததும் காதல், நல்லவர் வேடம் என இப்படி அடுக்கிக் கொண்டு போகலாம்.

முக்கியமாக சரவணன் வெளியேற்றம் மற்றும் மதுமிதாவின் தற்கொலை முயற்சியை குறிப்பிடலாம்.

ஆனால் இது இரண்டுக்குமே பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசனின் தெளிவான விளக்கங்கள் ஏதுமில்லை, இது ஏன்? பிக்பாஸில் நடந்த விஷயங்களை மக்களிடம் காட்ட வேண்டியது தானே? ஏன் மூடிமறைக்க வேண்டும் என்பதே பலரின் கேள்வி.

சரவணன் வெளியேற்றம்

சேரன்- மீரா மிதுன் பஞ்சாயத்தின் போது, குறுக்கிட்ட சரவணன், பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றிருக்கிறேன் என கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் அப்படி கூறியதும் கமல்ஹாசன் கண்டித்திருக்கலாம் அல்லது விஜய் டிவி இதை எடிட் செய்திருக்கலாமே என்ற கேள்வி எழுந்தது.

பிரச்சனை தீவிரமடைந்ததால் சரவணனை மன்னிப்பு கேட்கும்படி கூறினார் பிக்பாஸ், ”இது போன்ற தவறை யாரும் செய்யக்கூடாது என்பதற்காக இப்படி கூறியதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்” கூறினார் சரவணன்.

இதோடு முடிந்துவிட்டது என கருதிய போது, திடீரென சரவணனை அழைத்த பிக்பாஸ், பெண்களை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி சரவணனை வெளியே போகச்சொன்னார்.

இதுபற்றி மற்ற போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் கதறி அழுதனர், ஏன் இப்படி செய்தீர்கள் என பிக்பாஸிடம் கேட்ட போது சனிக்கிழமை பதில் வரும் என தெரிவித்தார்.

ஆனால் அந்த வார நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒரு வார்த்தை கூட சரவணனை பற்றி பேசவில்லை, குறைந்தபட்சம் அவரை அழைத்தாவது விளக்கம் கேட்டிருக்கலாம்.

கடந்த சீசன்களில் பரணி, ஓவியா வெளியேறிய போதும் வார இறுதி நாளில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றது நினைவிருக்கலாம்.

சரவணனுக்காக கண்ணீர் சிந்திய சக போட்டியாளர்கள் கூட கமலிடம் அவரை பற்றி எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை.

உண்மையிலேயே பெண்கள் பற்றி பேசியதற்காக தான் சரவணன் வெளியேற்றப்பட்டாரா? என்ற சந்தேகம் பலருக்கும் இல்லாமல் இல்லை.

சேரனை இழிவாக பேசியதால் திரைத்துறையிலிருந்து வந்த அழுத்தம் அல்லது கமல்ஹாசனை ஒருமையில் பேசினார் என்பது போன்ற காரணத்தினால் அவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

மதுமிதா தற்கொலை முயற்சி

சரவணன் விடயம் முடிவதற்குள் மதுமிதா வெளியேறியுள்ளார், பிக்பாசின் விதிமுறைகளை மீறி தனக்கு தானே தீங்கிழைத்துக் கொண்டதால் வெளியேற்றப்பட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் என்ன நடந்தது? மதுமிதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? என்பதை தெளிவாக விளக்கவில்லை.

வெளியே வந்த மதுமிதாவும் கமலிடம், என் தைரியம் எந்த அளவுக்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பேன், என்னை எந்தளவுக்கு கீழ் தரமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசி முட்டாளாக்க பார்த்தார்கள், சேரனும், கஸ்தூரியும் விவாதங்களை தடுத்த நிறுத்த முயற்சித்தனர் என குறிப்பிட்டார்.

பிரச்சனை என்ன என்பதை பிக்பாஸ் காட்சிகள் மூலம் வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கமலும் மதுமிதாவை வன்மையாக கண்டிப்பார் அல்லது மற்ற போட்டியாளர்களிடம் விளக்கமாக பேசுவார் என்றால் அதுவும் இல்லை.

இப்படி தொடர்ந்து பல தீவிரமான பிரச்சனைகள் நடந்தும் கமலின் தெளிவான விளக்கங்கள் இல்லாதது பலருக்கும் வருத்தமே.

கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர தவறான முன்னுதாரணமாய் மாறிவிடக் கூடாது.

தனக்கான பணியை மட்டுமின்றி கமல்ஹாசன் கொஞ்சம் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே நெட்டிசன்களின் கருத்தும் கூட.

31845 total views