தர்ஷனை மறைமுகமாக விமர்சித்த கமல்.. நக்கலாக சிரித்த கஸ்தூரி.. என்ன சொன்னார் தெரியுமா?..

Report
1243Shares

பிக்பாஸ் வீட்டில் கவின் கேங்குடன் சேர்ந்துக்கொண்டு தர்ஷன் தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருவதை கமல்ஹாசன் மறைமுகமாக சாடினார்.

பிக்பாஸ் வீட்டில் வந்த நாள் முதல் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தர்ஷன். என்ன நடந்தாலும் முதலில் குரல் கொடுப்பவர் தர்ஷனாகத்தான் இருந்தார். எல்லோரும் அஞ்சி நடுங்கிய வனிதாவையே தில்லாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டவர் தர்ஷன். இதனால் மக்களிடம் அவருக்கு என நல்லப் பெயர் கிடைத்தது.

இதனால், கவின், சாண்டி, லொஸ்லியா மற்றும் முகெனுடன் சேர்ந்து கொண்டு தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கஸ்தூரி, தான் எது பேசினாலும், தர்ஷன் தன்னை நீங்கள் புதுசா வந்தவர் பேசக்கூடாது என்று கூறுகிறார் என கமலிடம் கூறினார். இதனைக்கேட்ட கமல், அவரே புதுசா வந்திருப்பவர்தானே என அவர் மாறிவிட்டதை மறைமுகமாக சாடினார். இதனைக் கேட்டு தர்ஷன் முகம் மாறியதை காண முடிந்தது. இதற்கு கஸ்தூரி நக்கலாக சிரித்ததையும் காணமுடிந்தது.

கமல் இதுபோன்று மறைமுகமாக தாக்குவதில் வல்லவர். வனிதா பிரச்சனையை தூண்டி விடுகிறார் என்பதை தூண்டுகோளாய் இருக்கிறார் என இன்டைரக்ட்டாக கூறினார். அதேபோல் அபியை கூட உங்களுக்கு தெரியாத தல யா என கேட்டு அசத்தினார். பல இடங்களில் கமல், மறைமுகமாக புகழ்வதிலும் சாடுவதிலும் சிறந்த கலைஞர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

loading...