இந்த வாரம் ரகசிய அறையில் இவரா?.. கசிந்த தகவல்..!

Report
2472Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசனில் இல்லாத அளவுக்கு தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் பல சர்ச்சைகளும் திருப்பங்களும் நடந்துகொண்டிருக்கிறது. பிக்பாஸின் சர்ச்சைகளையும், தொடர்ந்து 2 வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதும் இதுவே முதல்முறையாக நடைபெற்றுள்ளது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் மற்றும் சாக்க்ஷி வெளியேறிய நிலையில் கடந்த வாரம் மதுமிதா மற்றும் அபிராமி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் போட்டியாளர்களும் குறைவாக ஆகி விட்டனர். எனவே, இந்த வாரம் ரகசிய அறையை பயன்படுத்த பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நபர்களில் இருந்து வெளியேறும் யாராவது ஒருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படாமல் ரகசிய அறையில் வைக்கப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வாரம் நாமினேஷனில் சேரன், சாண்டி, தர்ஷன், கஸ்தூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

எனவே இந்த வாரம் வெளியேற போகும் நபர் ரகசிய அறையில் வைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கஸ்தூரி தன் வீட்டில் அதிகம் சர்ச்சையை ஏற்படுத்துவதாக தெரிகிறது. எனவே கஸ்தூரியை ரகசிய அறையில் வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

89914 total views