அபிராமி சென்றதும் முகேன் செய்த காரியம்.... காதலே இல்லை என்று கூறியவரா இப்படி?

Report
579Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் சாக்ஷி, சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் சனி, ஞாயிறில் மதுமிதா, அபிராமி வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் மக்களுக்கு பிடிக்காத நபராக இருந்த அபிராமி அதன்பின்பு, தனது குணத்தினை வெளிப்படுத்த வெளிப்படுத்த மக்களுக்கு பிடித்தவராக மாறினார்.

அதன்பின்பு வனிதா வந்ததும் அவர் ஆட்டிவைத்த பொம்மையாக மாறிய அபிராமி முகேனிடம் படுபயங்கரமாக கோபமடைந்தார். இதனால் இருவருக்குள் பிரிவு ஏற்பட்டது.

நேற்றைய தினத்தில் அபிராமி வெளியேறிய போது அவர் கையில் கொண்டு வந்த மெடல் ஒன்றினை உடைத்துவிட்டு சென்றார். அப்போது அவர் உடைத்துவிட்டுச் சென்ற மெடலை முகேன் எடுத்து ஒட்ட வைத்துக்கொண்டிருந்தார்.

இத்தருணத்தில் தர்ஷன் கூட முகேனைக் கலாய்த்தார். ஆனாலும் மீண்டும் அந்த மெடலை பார்த்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் தன்னை காதலிக்கிறேன் என்று கூறிய அபியிடம் உன்னை தோழியாகவே நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார் முகேன்.

அதுமட்டுமின்றி அபிராமி அபிராமி இருந்தாலும் சந்தோசம் தான் வெளியில் போனாலும் சந்தோசம் தான் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது அபிராமி வெளியில் சென்றதும் முகென் செய்த இந்த செயலை வைத்து பார்க்கும் போது முகெனுக்கும் அபி மீது காதல் இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

22298 total views