இந்த வாரம் வெளியேறப்போவது யார்? கசிந்த முக்கியமான தகவல்

Report
2923Shares

பிக்பாஸ் சீசன் 3 நாளுக்கு நாள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் வாரத்தின் முதல் நாள் என்பதால் இன்று எவிக்ஷனுக்கு யார் யார் போகிறார்கள் என்பது தெரியவரும்.

ஏற்கனவே ஏழு வாரங்களை கடந்துள்ள போதும், இனி வரும் காலகட்டங்கள் மிகவும் கடினமாக இருக்கும்.

இரண்டு சீசன்களிலும் இல்லாதளவு பல பிரச்சனைகளை கடந்துள்ள சீசன் 3ல் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்பதே ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில் சேரனின் பெயரை கூறிய லொஸ்லியா, இரண்டாவது ப்ரமோவில் அதற்காக அழுகிறார்.

ஷெரின் தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய இயலாது, எனவே இந்த வாரம் சாண்டி, தர்ஷன், சேரன் மற்றும் கஸ்தூரியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் நால்வரும் ஓட்டிங்குக்கு செல்லும் பட்சத்தில் சமீபகாலமாக சேரன் மீதான விமர்சனத்தால் அவரே வெளியேறுவார் என தெரிகிறது.

106111 total views