கடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து!

Report
1146Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் சாக்ஷி, சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் சனி, ஞாயிறில் மதுமிதா, அபிராமி வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் மக்களுக்கு பிடிக்காத நபராக இருந்த அபிராமி அதன்பின்பு, தனது குணத்தினை வெளிப்படுத்த வெளிப்படுத்த மக்களுக்கு பிடித்தவராக மாறினார்.

அதன்பின்பு வனிதா வந்ததும் அவர் ஆட்டிவைத்த பொம்மையாக மாறிய அபிராமி முகேனிடம் படுபயங்கரமாக கோபமடைந்தார். இதனால் இருவருக்குள் பிரிவு ஏற்பட்டது.

தற்போது நேற்றைய தினத்தில் வெளியேறிய அபிராமி தனது முதல் பதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் வந்துவிட்டேன் பாரதி கண்ட புதுமை பெண்ணாக நேர்கொண்ட பார்வையுடன்.... உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.


47272 total views