கதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்? அசிங்கப்படுத்திய கமல்!

Report
3103Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லொஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக மது வெளியேற்றப்பட்டார்.

இன்று குறைந்த வாக்குகளை பெற்றதால் அபிராமி வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் கமல் வழமை போல வீட்டில் உள்ள அனைவரிடமும் கலந்துரையாடினார்.

கடந்த சில வாரமாகவே சேரன் மற்றும் லொஸ்லியா உறவில் விரிசல் ஏற்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில், இன்று அதற்கு கமல் முற்றுபுள்ளி வைத்து விட்டார். லொஸ்லியாவும் அவர் மனதில் உள்ள குழப்பங்களை கூறியுள்ளார்.

பின்னர் சேரனும் அவர் பக்கம் உள்ள நியாயங்களை தெளிவுப்படுத்தினார். பின்னர் இருவரும் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டு கொண்டனர்.

இதேவேளை, சேரன் லொஸ்லியா மீது கொண்ட பாசத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இது பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ வைத்திருந்தது. பொருத்திருந்து பார்ப்போம் மிகுதி உள்ள நாட்களும் இது போலவே பாசம் நீடிக்குமா என்பதை.

மேலும், பிக் பாஸ் 3 வீட்டிற்கு 17வது போட்டியாளராக கஸ்தூரி சென்ற வேகத்தில் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார் வனிதா. வனிதா வந்ததால் கஸ்தூரி கிட்டத்தட்ட டம்மியாகிவிட்டார்.

பாவம், கஸ்தூரியை தான் சக போட்டியாளர்கள் அசிங்கப்படுத்துகிறார்கள். கற்பூர குணத்தை பற்றி கமல் இன்று பேசினார்.

சாந்தமாக இருந்த தர்ஷனுக்கு எல்லாம் கற்பூரம் போன்று பத்திக் கொள்ளும் குணம் வந்துவிட்டது.

கற்பூரத்தன்மை திடீர் என்று எங்கிருந்து வந்தது என்று கமல் கேள்வி எழுப்ப வத்திக்குச்சி உள்ளே வந்துவிட்டதுல்ல சார் என்று கஸ்தூரி தெரிவித்தார். கஸ்தூரியின் பதிலை கேட்டு வனிதாவுக்கு முகமே நொடியில் மாறிவிட்டது. பின்னர் வத்தி குச்சி என்ற பெயரை வைத்து கமலும் கலாய்த்துள்ளார்.

loading...