பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா! கோபத்தில் பார்வையாளர்கள்

Report
1127Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று அபிராமி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லொஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்ன வென்றால் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார்.

இன்று அபிராமி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இதனை கேட்டு அனைவரும் சோகத்தில் மூழ்கி விட்டனர்.

இதேவேளை, அபியை லொஸ்லியா கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.

மேலும், வனிதா திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்த பார்வையாளர்களே தற்போது அவர் மீது கோபத்தில் உள்ளனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தூபம் போட்டதே வனிதா தான்.

இந்த வனிதாவால் எப்பொழுதும் நல்லது செய்யவே முடியாது. தயவு செய்து அவரை விரட்டிவிடுங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...