லொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை! கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன?

Report
1371Shares

பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக வனிதா வந்த பின்னர் மீண்டும் நிகழ்ச்சி சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

பிக் பாஸ்சின் இரண்டு சீசன்களில் இல்லாத அளவு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவை முகென் அறைந்துவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று லொஸ்லியாவுக்கு கமல் முன்னிலையில் தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில், பிக் பாஸ் ரசிகை ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது,

நீங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளீர்கள். ஆனால் ஒரே இடத்தில் இருந்து டான்ஸ் ஆடாமல் பேச முடியாது என்று பிக் பாஸ் வீட்டில் கூறியிருந்தீர்கள். அப்படியாயின் நீங்க வேலை செய்யும் போது உங்களால் எப்படி அப்படி இருக்க முடிந்தது என்று கேட்டிருந்தார்.

லொஸ்லியாவின் பதில்

அது என் தொழில், அங்கு ஆடிக் கொண்டு செய்தி வாசிக்க முடியாது என்று கூறினார். இதனை கேட்டு கமல் சிரித்து விட்டார். அதில் பல உள் நோக்கம் இருப்பது போலவே அனைவருக்கும் தெரிந்தது.

இதேவேளை, ரசிகையின் இந்த கேள்வியின் பின் புலத்தில் பல அர்த்தங்கள் இருக்கின்றது. ஆரம்பத்தில், ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்த லொஸ்லியாவின் நடவடிக்கையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுக்கின்றது.