பல பிரச்சினைகளுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் அபிராமி... வெளியான ரகசிய தகவல்

Report
608Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லொஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறினார்.

பிக்பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவை முகென் அறைந்துவிட்டார் நாட்களுக்கு வதந்தி பரவிய நிலையில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது.

இந்நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்று இருப்பது முதல் ப்ரோமோ மூலம் உறுதியானது. இது ஒருபுறம் இருக்க கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த ஓட்டிங்கில் அபிராமி தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வந்தார். மேலும், பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கிலும் அபிராமிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வந்தன.

இந்த நிலையில் நேற்று மதுமிதா வெளியேறியதால் அபிராமி வெளியேற்றபடுவாரா இல்லையா சந்தேகம் நிலவியது. ஆனால், தற்போது வந்த தகவலின்படி அபிராமி வெளியேற்றபட்டதாக கூறப்படுகிறது.

27159 total views