வனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம்! இதுவும் நம்ம 5 ஸ்டார் குரூப்னால தான்

Report
902Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் சிறப்பு விருந்தினராக உள்ளே சென்ற வனிதா ஆடாத ஆட்டம் ஆடினார். ஒரு போட்டியாளர்கள் கூட விடாமல் அனைவரிடமே கோள்மூட்டி சண்டையினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் நேற்றைய தினத்தில் கஸ்தூரி கமலிடம் பேசிக்கொண்டிருக்கையில், ஆண்கள் கற்பூரமாக இருக்கின்றனர் என்று கூறினார்.

அதற்கு இந்த தலைப்பினை நாளைய தினத்தில் பேசுகிறேன் என்று நிகழ்ச்சியை முடித்தார் கமல். தற்போது கற்பூரம் இவ்வாறு பற்றிக்கொள்வதற்கு என்ன காரணம் என்று கேட்டார் கமல். அதற்கு அங்கிருந்த கஸ்தூரி வத்திக்குச்சி உள்ளே வந்துவிட்டதுலா சார் என்று வனிதாவை அசிங்கப்படுத்தினார். இதில் அரங்கமே கைதட்ட வனிதா கூனிக்குறுகி போனார்.