வியாழன் இரவு நடந்தது என்ன? மது கையை அறுத்தது இதனால் தான்! தீயாய் பரவும் முகநூல் பதிவு

Report
1988Shares

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்தது என்று முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டில் நடந்த விவாதத்தின் போது தனது நிலையை நிரூபிக்க மதுமிதா இவ்வாறு தனது கையை அறுத்ததால் அவர் முக்கிய விதியை மீறியதாக நேற்று வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அந்த சம்பவத்தினை வெளியே காட்டாத பிக்பாஸின் ரகசியத்தை பிக்பாஸ் எடிட்டிங் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக முகநூல் பதிவு ஒன்று வைரலாகிவருகின்றது.

ஹலோ டாஸ்க் மூலம் தான் இங்கு பிரச்சினை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. இந்த டாஸ்கில் மது, வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் போல... கொஞ்சம் கருணை காட்டி தமிழகத்திற்கு மழை வரவழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ஷெரின், இங்கு எதற்காக கர்நாடகா, தமிழ்நாடு பிரச்சினையைக் கொண்டுவருகிறீர் என்று கூறியுள்ளார்.

இதனைப் பிடித்துக்கொண்ட மது தான் கூறியது சரி என்பதை நிரூபிப்பதற்கு விவாதம் மேற்கொண்டுள்ளார். ஆனால் பிக்பாஸோ இந்த கருத்தினை வெளியிட முடியாது என்றும் உங்களது கருத்தினை மாற்ற வேண்டும் என்று கூறியதை கேட்காமல் மது மீண்டும் அடம்பிடித்துள்ளாராம்.

சேரன் உட்பட அனைவரும் இந்த கருத்தினை மாற்றுமாறு மதுவிடம் விவாதம் செய்தும் கேட்காமல் அடம்பிடித்துள்ளார். கேப்டனாக இருக்கும் நீங்கள் ஹவுஸ்மேட்ஸ் பற்றியும் நினைக்க வேண்டும் என்று அனைவரும் தெரிவித்துள்ளனர். நீங்க இப்படி பண்ணினா எங்களுக்கு எப்படி கேப்டனாக இருக்க முடியும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் ஷெரின் மதுமிதா இங்கே இருந்தால் நான் கிளம்புகிறேன் என்று கூறியுள்ளார். சும்மா இங்கு வந்துவிட்டு உனக்கு மட்டும்தான் அக்கறை இருப்பது மாதிரி காட்டிக்கொள்ள வேண்டும், ஓட்டுக்காக இப்படி பண்ணுற என்று வனிதாவும் மதுமிதாவிடம் கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அனைத்து போட்டியாளர்களும் தன்னிடம் விவாதம் செய்யவே தான் கூறியது சரி என்பதை நிரூபிக்க மதுமிதா தனது கையை கீறிக்கொண்டு ரத்தத்தை காட்டி தனது அக்கறையினை நிரூபிக்க நினைத்துள்ளாராம்.

இந்நிலையில் அங்கு வேலை செய்யும் எடிட்டிங் குழுவைச் சேர்ந்தவர், மது தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை, தான் பேசியது சரி என்பதை நிரூபிக்க அப்படி செய்துள்ளார். மது வழக்கம் போன்று தேவையில்லாததை பேசி, பிக் பாஸ் கூறியும் கேட்காமல் அடம்பிடித்து இவ்வாறான நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தன்னைத் தானே காயப்படுத்தியதால் அவரை பிக் பாஸ் வெளியேற்றிவிட்டார். இது மதுவின் தவறு, யாரையும் குறை சொல்ல முடியாது. இது மதுவின் முட்டாள்தனம் என்று அந்த நபர் கூறியதாக ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

63316 total views
loading...