பிக்பாஸில் செம டுவிஸ்ட்!.. இன்று வெளியேறுவாரா வனிதா?

Report
860Shares

கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறினார் மதுமிதா.

இவரது தற்கொலைக்கான காரணம் தெளிவாக விளக்கப்படாத பட்சத்தில் ரசிகர்களுக்கு குழப்பமே மிஞ்சியிருக்கிறது.

இந்நிலையில் இன்று எவிக்ஷன் இருக்காது என கருதிய நிலையில், கண்டிப்பாக எவிக்ஷன் இருக்கு என டுவிஸ்ட் வைத்துள்ளார் கமல்ஹாசன்.

இதற்கிடையே சிறப்பு விருந்தினராக வந்துள்ள வனிதா இன்று வெளியேறுவாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அவர் வந்த பின்னரே கடந்த வாரம் நிகழ்ச்சி சூடுபிடித்ததால் கண்டிப்பாக அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பார் என்பதே பலரின் கணிப்பு.

எப்படியிருந்தாலும் வனிதாவே பிரச்சனைக்கு அடித்தளமாய் இருப்பதால் பிக்பாசுக்கு கொண்டாட்டம் தான், எதாவது காரணத்தை சொல்லி கண்டிப்பாக அவரை இருக்க வைத்து விடுவார்கள் என்பதே நெட்டிசன்களின் கருத்தாய் இருக்கிறது.

34215 total views