கர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு

Report
3331Shares

பிக்பாஸில் ஹலோ டாஸ்கின் போது நடிகை மதுமிதா இதை தான் பேசினார் என நளினியின் மகள் கூறியதாக பதிவொன்று வைரலாகியுள்ளது.

விதிமுறைகளை மீறி தனக்கு தானே தீங்கிழைத்துக் கொண்டதாக மதுமிதாவை வெளியேற்றினார் பிக்பாஸ்.

தற்கொலை முடிவுக்கு காரணங்கள் சொல்லப்பட்டாலும் தெளிவாக எதுவும் தெரியவரவில்லை.

இந்நிலையில் நளினியின் மகள் கூறியதாக சமூகவலைத்தளங்களில் பதிவொன்று வைரலாகி வருகிறது.

அதாவது, ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, "வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே", எனும் கருத்து கூறியதாக நளினி மகள் தெரிவித்துள்ளார்.

இதை கூறியதற்காகத் தான் சக போட்டியாளர்கள் மதுவை மிக மோசமாக நடத்தியதாகவும், இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றவர் தற்கொலை முடிவை கையிலெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக முதலுதவி வழங்கி பிக்பாஸ் குழு காப்பாற்றியதாகவும், எது எப்படியிருப்பினும் மதுமிதா செய்தது தவறு தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.

எனினும் இதை அவர் கூறியது தானா என உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.

103931 total views