கொளுத்தி போட்டது யார்? சாண்டியின் பாணியில் லொஸ்லியா! சூடுப்பிடிக்கும் ஆட்டம்!

Report
1513Shares

பிக் பாஸ் போட்டியாளர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று கையில் கட்டுடன் பிக் பாஸ் மேடையில் கமலுடன் பேசிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மது தற்கொலைக்கு முயலும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பல விதமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அது ஒரு புறம் இருக்க வனிதாவின் வருகைக்கு பின்னர் நடந்த மாற்றம் குறித்து பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடனே சாண்டி வனிதா அக்கா வந்தவுடன் மீண்டும் விளையாட்டு சூடுப்பிடிக்க ஆரம்பித்து உள்ளது.

ஆனால், அவர் ஒவ்வொருவரிடமும் கொளுத்தி போடுகின்றார் என்று முகத்திற்கு நேராகவே கூறினார். அப்படியா என்று கமல் லொஸ்லியாவிடம் கேள்வி எழுப்பினார்.

அவரும், சாண்டி பாணியில் வனிதா கொளுத்தி போடுவதை கூறினார். இதனை பார்த்த பார்வையாளர்கள் அரங்கத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதற்கு பதில் கூற முனைந்த வனிதாவை இறுதி வரை பார்வையாளர்கள் பேச விடவே இல்லை. இறுதியில் வனிதா பேச வந்த விடயத்தையே மறந்து விட்டார்.

loading...