பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மதுமிதா... ஓட்டிங்கில் கடைசியாக இருந்த அபிராமியின் நிலை என்ன..?

Report
1610Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் பிரச்சனைகள் எழுந்து வந்த நிலையில், நேற்று சேரன் கஸ்தூரியை தவிர மற்ற அனைத்துப் போட்டியாளர்களும் மதுமிதாவுடன் சண்டையிட ஆரம்பித்தனர்.

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியானது.

அதன்படி, இன்று காலையிலிருந்து பிக்பாஸ் ப்ரொமோ வீடியோ எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் மாலையில் ஒரே ஒரு ப்ரோமோ வீடியோ வெளியானது.

அதில், கையில் கட்டுடன் மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கமல்ஹாசன் மிகவும் வருத்ததுடன் மதுமிதாவை வரவேற்றார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமித வெளியேறிவிட்டதால் இந்த வாரம் எவிக்‌ஷன் கிடையாது என்று செய்திகள் பரவி வந்த நிலையில், ஓட்டிங் லிஸ்ட் முறைப்படி அபிராமி தான் குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார். இதனால் அபிராமியும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் வேற லெவலில் சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த சீசன்களிலாவது, சந்தோஷம், சோகம், என அனைத்தும் இருந்தது. ஆனால் இந்த சீசனில் வெறும் பிரச்சனைகள் மட்டும் தான் இருக்கிறது.

இதனால், ஒரு பெண் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த சீசனில் பெண்களே அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் இதை தடை செய்யவேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

53735 total views
loading...