பிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா..? இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா?

Report
1541Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களைப் போல் இல்லாமல் தினம் தினம் பல்வேறு பிரச்சனைகளை சமாளித்து வருகிறது.

கவின் சாக்‌ஷி காதல் பிரச்சனையை தொடர்ந்து, தினம் தினம் பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டினுள் எழுகிறது.

இது ஒருபுறமிருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்க்ரிப்ட் தான், வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்கள் நடிக்கத்தான் செய்கிறார்கள் என்ர விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதற்கு ஏற்றார்போல், வனிதாவும் சிறப்பு விருந்தினராக வீட்டிற்குள் சென்று பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், முகேன், வனிதாவை அடித்துவிட்டதாக ஒரு விடயம் வைரலானது, இதையடுத்து, மதுமிதா தற்கொலைக்கு முயன்றார் என்றும், இதனால் மதுமித பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார் எனவும் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை, கமல் வரும் தினம், ஆனால் இன்றைய தினம் எந்தவொரு ப்ரோமோ வீடியோவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், தொலைக்காட்சியில் கூட எந்த ஒரு ப்ரோமோவும் வெளியிடபடவில்லை. இதனால் மதுமிதா தற்கொலைக்கு முயன்ற செய்தி உண்மையாக இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கமல், இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் பிக் பாஸ் படப்பிடிப்பிற்கு வரவில்லை என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது.

இருப்பினும் கமல் இல்லாமல் கூட இன்றைய ப்ரோமோவை வெளியிட்டுருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது.