பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த இரண்டு வாரத்துக்கு கமல் வரமாட்டாரா?.. இது தான் காரணமாம்..!

Report
2514Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 54 நாட்களை கடந்து விட்டது. இதுவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் பாதி கிணற்றை தாண்டி விட்டனர். எனவே, இனி வரும் தாண்டி டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருக்கும் நிலையில், கமல் இரண்டு வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற மொழிகளில் ஒளிபரப்பப்படுவது போல பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை மூன்று சீசன்கள் கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்று சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் மேடையில் தான் கமல் தனது அரசியல் பேச்சுகளையும் இங்கு பேசி வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு 10 நாள் விடுமுறை எடுக்க போகிறராம் கமல். இதற்கு முக்கிய காரணமே கமல் நடித்து வரும் இந்தியின் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதால் தானாம். ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது சென்னை எம் ஜி ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி கலந்துகொள்ள இருக்கிறாராம். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு இரண்டு வாரம் கமல் வராமல் கூட போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

68255 total views