பிக்பாஸில் இந்த வாரம் விருந்தினராக வந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Report
2289Shares

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வனிதா சென்றுள்ளார். இவர் வீட்டிற்குள் வந்ததும் பிரச்சனைகள் உருவாகிவிட்டது என்றே கூறலாம்.

இதனால், வனிதாவிற்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை சரியாக செய்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பயங்கரமாக வைரலாகி வருகின்றன.

இதற்கிடையில், கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் wildcard-ல் நுழைந்துள்ளார். கஸ்தூரியும் சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் கொஞ்சமும் சளைக்காத ஒரு நபர் தான்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போகிறார் என்று சொன்னதும் இவர் வனிதாவை விட சர்ச்சைக்குரிய நபராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரை மற்ற போட்டியாளர்கள் ஒரு காமெடி பீஸை போல தான் பார்த்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வனிதாவும், போட்டியாளராக கஸ்தூரியும் இருப்பதால் கண்டிப்பாக புதிய பிரச்சனைகள் பல நிகழும் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், வனிதா இந்த வாரம் முழுக்க பிக் பாஸில் தான் இருக்க போகிறார் என்றும், இதற்காக வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

72271 total views
loading...