நெருங்கிய தோழியாக இருந்த அபி, லொஸ்லியா.... நள்ளிரவில் வனிதா செய்த நாரதர் வேலை! நீக்கப்பட்ட காட்சி

Report
757Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கள் கிழமை சிறப்பு விருந்தினராக உள்ளே சென்ற வனிதா தனது சகுனி ஆட்டத்தினை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார்.

ஆம் நேற்றைய தினத்தில் அபி, முகேன் இருவருக்குமிடையே சண்டை மூட்டிவிட்டு பிக்பாஸ் வீட்டை ரணகளப்படுத்தினார்.

அதோடு விட்டுவிடாமல் அபிராமியிடம் நள்ளிரவில் லொஸ்லியாவைப் பற்றி கோள்மூட்டி விட்டுள்ளார். சமீபத்தில் லொஸ்லியா, அபி இருவருமே மிகவும் நெருங்கிய தோழிகளாக வலம் வந்தனர் என்பது யாவரும் அறிந்த விடயமே...

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற வனிதா வெளியே மக்கள் யாரை யாரைப் பற்றி எவ்வாறு நினைக்கிறார்கள் என்பதைக் கூறி கச்சிதமாக கலகமூட்டி வருகின்றார்.

நேற்றய எபிசோடில் இரவு நேரத்தில் அபி மற்றும் ஷெரினிடம் பேசி கொண்டிருந்த வனிதா, லொஸ்லியா ஆண்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்வதற்கு முக்கிய காரணமே அவளுக்கு ஆதரவு வேண்டும் என்பதால் தான்... மேலும் அவள் நாமினேட் செய்ய சில பேரை தூண்டிவிடுகிறா என்றும் அவ ஒரு சைலன்ட் கில்லர் அது உனக்கு தெரியவில்லை.... நிறைய விஷயம் நீ வெளியில் போய் பார்த்தால்தான் தெரியும் என்று அபிராமியிடம் கூறினார் வனிதா.

இது போன்றே முகேனைக் குறித்து அபிராமியிடம் நேற்றைய தினத்தில் கூறியதால் அது பாரிய சண்டை வரை சென்றது. தற்போது வனிதா லொஸ்லியாவைக் குறித்து அபிராமியிடம் இவ்வாறு கூறியுள்ளது மிக விரைவில் மற்றொரு பாரிய பூகம்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

31893 total views