கையில் குழந்தையுடன் சென்று விருது பெற்ற சரவணன்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

Report
1365Shares

பிக் பாஸில் இருந்து சர்ச்சைக்குறிய முறையில் வெளியேற்றப்பட்ட சரவணன் குழந்தையுடன் சென்று விருது வாங்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டு அரசினால் அண்மையில் கலைப்பிரிவுகளில் திறமை மிக்க 2019 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் இடம்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் சரவணனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதன் போது, சரவணன் தனது குழந்தையுடன் சென்று விருதினை பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணனை பார்த்ததில் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். அது மாத்திரம் இன்றி, அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார்.

ஆனால்,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியது தவறு என்று கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலராலும் இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

45119 total views