நரேந்திரமோடியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த சன்னிலியோன்..!

Report
98Shares

ஆபாச படத்தில் நடிப்பதை விட்டு பாலிவுட்டில் கால் வைத்த பின்பு, நடிகை சன்னி லியோன் தனது நடிப்பு மற்றும் திறமையால் சினிமாவை கலக்கி வருகிறார்.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், மீண்டும், சன்னி லியோன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கூகிள் ட்ரெண்ட்ஸ் அனலிட்டிக்ஸ் படி, சன்னி தொடர்பான பெரும்பாலான தேடல்கள் அவரது வீடியோக்களுடன் தொடர்புடையவை, அதுத்தவிர, அவரது வாழ்க்கை வரலாற்றுத் தொடரான 'கரஞ்சித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' மக்கள் அதிகம் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர, சன்னி தொடர்பான பெரும்பாலான தேடல்கள் மணிப்பூர், அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் தேடப்பட்டதைக் காட்டுகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை சன்னி லியோன், இந்த தகவலை எனது குழு எனக்கு தெரிவித்தது. எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கும் எனது ரசிகர்கள் எனக்கு கடவுள் மாதிரி என்றும் கூறினார். இது ஒரு சிறந்த உணர்வு எனக் கூறினார்.

2656 total views