முதன்முறையாக ஒருமாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமீரா ரெட்டி..! கியூட் புகைப்படம்

Report
230Shares

நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெய்னி தில் துஜ்கோ தியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர், தமிழில் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் நடித்து பின்னர் சூர்யா நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த மாதம் ஜூன் 12ம் தேதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு "நைரா" என பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் சமீரா ரெட்டி தற்போது மகள் நைரா பிறந்து ஒரு மாதம் ஆகியுள்ளதை அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

6217 total views