பொய்யான காரணத்தை கூறிய லொஸ்லியா! வெளிவரும் உண்மை முகம்... வைரலாகும் குறும்படம்

Report
2112Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது.

நாமினேஷனில் கவின், லொஸ்லியா, முகேன், அபிராமி மற்றும் மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேற்றய நிகழ்ச்சியில் ஷெரினை, லொஸ்லியா மட்டும் தான் நாமினேட் செய்திருந்தார். ஆனால், அதற்காக அவர் சொன்ன காரணம் தான் வேடிக்கையாக இருந்தது.

ஷெரினை, சாக்க்ஷி பயன்படுத்தினார் என்ற ஒரு விடயத்தை கூறி லொஸ்லியா நாமினேட் செய்தார்.

அவராக கூறியிருந்தால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு இன்னொருவர் மூலமாக சொல்ல வைத்தது சரியாக படவில்லை என்றும் லொஸ்லியா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உண்மையில் சாக்க்ஷியிடம் தர்ஷன் சொன்ன விடயம் ஷெரீனுக்கு தெரியவே தெரியாது. என்ன நடந்தது என்பது தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நாட்கள் செல்ல செல்ல தான் லொஸ்லியாவின் உண்மை முகம் வெளி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், தற்போது லொஸ்லியாவின் நடவடிக்கைகளை ரசிகர்கள் வெறுத்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களே அவருக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

66342 total views