முன்னாள் கணவரின் வருத்தம்.. இரண்டாவதாக திருமண செய்யும் சின்னத்தம்பி சீரியல் நாயகி பவானி..!

Report
955Shares

பிரபல ரிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்தம்பி தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் பவானி ரெட்டி. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

கணவர் தற்கொலை செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை பவானி ரெட்டி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.

நடிகை பவானி ரெட்டி கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த 2017 மே மாதம் கணவர் பிரதீப் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவானி பின்னர் மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில், தனது கணவர் தற்கொலை குறித்து பேசிய அவர் கண்ணீர் விட்டு அழுதார். தான் மட்டும் சென்றிருந்தால் தனது கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார்.

அவர் விளையாட்டுத்தனமாக செய்தது வினையாக முடிந்துவிட்டது என்றும் பவானி கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தான், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார். குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறினார் பவானி.

மேலும் தனது கையில் வறைந்துள்ள டாட்டூ குறித்து பேசிய அவர், தனது முன்னாள் கணவர் பிரதீப் பெயரை ஹார்ட்டின் மற்றும் இதயதுடிப்புடன் வறைந்திருக்கும் டாட்டூவை காட்டினார். இதனை ஆனந்துதான் பரிசளித்தார் என்றும் கூறினார்.

முழுக்க முழுக்க பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று அறிவித்துள்ள பவானி, இம்மாதம் திருமணம் குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றார். தனது வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்திருந்த தனக்கு ஆனந்த் வாழ்க்கை கொடுப்பதாகவும் கூறினார்.

34399 total views