இந்த வார வைல்ட் கார்ட் எண்ட்ரி இவரா?.. சாக்‌ஷியை பிக்பாஸ் வெளியேற்ற மாட்டார்களா?.. வெளியான தகவல்..!

Report
1197Shares

பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா என்று மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது நான்காம் வாரத்திற்கான நாமினேஷன் நேற்று துவங்கியது. இந்த வார நாமினேஷனில் சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பெரும்பாலும் மக்கள் கணிப்பில் சாக்‌ஷி தான் வெளியேற போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல பல்வேறு தனியார் வலைதளங்களில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்பில் சாக்ஷிக்கு தான் நடத்தப்பட்டு குறைவான வாக்குகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி புதிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாக்‌ஷு வெளியேற மாட்டாரா?

அது என்னவெனில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டினுள் வைல்டு போட்டியாளர் நுழைய போகிறார். எலிமினேஷன் செய்யப்படும் நபர் சீக்ரெட் ரூமில் வைக்கப்படலாம் என்றும் பரவி வருகிறது. எனவே இந்த மாதம் ஒருவேளை சாக்க்ஷி வெளியேறினாலும் அவர் சீக்ரெட் ரூமில் வைக்கப்படலாம் என்று நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல வைல்ட் கார்ட் என்ட்ரி பொறுத்தவரை பிரபல நடிகையான சங்கீதா இந்த சீசனில் 17ஆவது போட்டியாளராக கலந்து கொள்வார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், இதற்கு சங்கீதாவின் கணவர் க்ரிஷ் அது வெறும் வதந்திதான் என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமடைந்த ஆல்யா மானசா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் ஆல்யா மானசா நடித்து வந்த ராஜா ராணி தொடர் நிறைந்துள்ளதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெரும்பாலான வாய்ப்புகள் இருப்பதாகவும் எண்ணப்படுகிறது. மேலும், ஆல்யா மானசா விஜய் டிவி பிரபலம் என்பதாலும் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, பெரும்பாலும் இந்த வாரம் அவர் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

46438 total views