பிக்பாஸில் பெண்களை மட்டும் கட்டிப்பிடித்தது ஏன்?... சாண்டி, கவினை ஒதுக்கியதற்கு காரணம்! அழுகையுடன் கூறிய மோகன்

Report
1680Shares

பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் இவரை ரசித்த மக்கள் கடைசி வாரத்தில் அவரை வெறுக்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.

கடந்த வாரங்களில் அவர் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கடுப்பில் ஆழ்த்தியது. தற்போது வெளியே வந்த அவர் பிக்பாஸ் வீட்டில் தனது அனுபவம் எப்படியிருந்தது என்பதைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீடு வாழ்நாளில் நான் மறக்கமுடியாது ஒன்று, அங்கு இருந்தவர்கள் அனைவரும் எனது சொந்தங்களாகவே இருந்ததால் அவர்களை பிரிய மனமில்லாமல் கதறினேன் என்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி நைனா மோகன் போன்று கெட்டப்பில் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது குறித்து கூறும்போது, ஆரம்பத்தில் சற்று வலித்தாலும், இது ஒரு நகைச்சுவையாகவே நான் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

பின்பு தர்ஷனை அப்பா என்று கூப்பிடாதே என்ற காரணத்திற்கு, எனது மகன் வீட்டில் எனது பேச்சைக் கேட்காவிட்டால் நான் இவ்வாறு தான் கூறுவேன். தர்ஷனை என்னுடைய மகன் என்று நினைத்து தான் அவ்வாறு கூறிவிட்டேன். பின்பு அவர் அழுததை அவதானித்த மனம் வலித்தது என்று கூறியுள்ளார்.

ரேஷ்மா குறித்து கூறுகையில், அவர் கர்ப்பமாக இருக்கும் போது பட்ட வேதனை, தனிமையில் பட்ட கஷ்டம் எனது இதயத்தில் ரத்தம் வழியவைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது, அப்பா, மகள் இடையே உள்ள பாசம் என்றும், தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு அது தவறாகவே தெரியும். தற்போது வரை நான் யாரையும் அப்படி தவறாக நினைத்து அவ்வாறு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடைசியாக வெளியே வரும் போது சாண்டி, கவினை கட்டிப்பிடிக்காததற்கு காரணம் என்னவென்றால் சாண்டியில் கண்களில் காணப்பட்ட கண்ணீர் தான் என்று கூறியுள்ளார்.

63093 total views