விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளரிடம் காதலை கூறிய கவின்! அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி? மன்னிப்பு கோரிய லொஸ்லியா?

Report
1104Shares

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து முதலாவதாக வெளியாகியுள்ள ப்ரொமோ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் “பாட்டு பாடவா பார்த்து பேசவா” என்ற டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.

அதில் கவின் எழுந்து சாக்ஷியை பார்த்து காதலை வெளிப்படுத்துவது போல பாடல் பாடியுள்ளார். இதனை பார்த்து காக்ஷியே வாயடைத்து போய்விட்டார்.

இதேவேளை, 2011ம் ஆண்டு சாக்ஷிக்கு திருமணமாகி விவாகரத்தானதாக தற்போது இணையங்களில் தகவல் கசிந்து புது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் கவினின் காதல் நிலைக்குமா என்று பார்வையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், தற்போது வெளியான இரண்டாவது ப்ரொமோவில் கவினிடம் இலங்கை பெண் லொஸ்லியா மன்னிப்பு கோருகின்றார். மீண்டும் அவர்கள் இருவரும் நண்பர்களாக இணைந்து விட்டனர்.

இது நிலைக்குமா? அல்லது முறியுமா என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

48739 total views