பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..!

Report
3745Shares

பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள் குறித்து வனிதா விஜயக்குமார் வாய் திறந்துள்ளார். பல மொழிகளில் ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் சீசன் 3யை எட்டியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்த மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதால் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தான் வெளியேற்றப்பட்டதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டிக் கொடுத்து பகிர்ந்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் கொடுமைகள் இதுவரை நடந்து முடிந்த 2 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சொல்லாத பல விஷயங்களை வனிதா கூறி வருகிறார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல கொடுமையான விஷயங்களையும் கூறியுள்ளார் வனிதா.

அதாவது பிக்பாஸ் வீட்டில் விடிய விடிய லைட்டுகள் எரிந்து கொண்டே இருக்குமாம். சும்மா கேமராவுக்காக ஒரு சில நிமிடங்கள் தான் லைட்ஸை நிறுத்துவார்களாம்.

பின்னர் அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் லைட்ஸ் ஆன் செய்யப்பட்டு விடுமாம். இரவு முழுக்க லைட்டுகள் எரிந்து கொண்டே இருக்குமாம் அந்த வெளிச்சத்திலேயேதான் போட்டியாளர்கள் தூங்க வேண்டுமாம்.

ஆக இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் லைட்டுகள் ஆஃப் செய்யப்படுவது போன்று காட்டுவது பொய் என தெரியவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் பகலில் தூங்கினால் துப்பாக்கியால் சுட்டு எழுப்பிவிட்டு விடுகிறார்கள்.

பகலிலும் தூக்கம் இல்லாமல் இரவிலும் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் போட்டியாளர்கள். என்னதான் சகல வசதிகளும இருந்தாலும் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாவிட்டால் எப்படி பிக்பாஸ்..

131764 total views