சாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா?... அம்பலமாகிய ரகசியம்

Report
1723Shares

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாக்ஷியை பற்றி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாக்ஷி அகர்வாலுக்கு கவின் மீது காதல். ஆரம்பத்தில் சாக்ஷி பின்னாலேயே சுற்றிய கவினுக்கு தற்போது லாஸ்லியா மீது ஃபீலிங். கவினுக்கு சாக்ஷியும் வேண்டும், லாஸ்லியாவும் வேண்டும். இந்நிலையில் தான் பிக் பாஸ் பார்வையாளர் ஒருவர் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

பார்வையாளர்கள் தன்னை பற்றி நல்லவிதமாக நினைத்துக் கொண்டிருப்பதாக கருதுகிறார் சாக்ஷி. ஆனால் அவர் விஷம், பாம்பு என்று கூறி திட்டுகிறார்கள் பார்வையாளர்கள். பிறந்தநாளும் அதுவுமாக பிக்பாஸ் குறும்படம் போட்டு சாக்ஷியை கதறவிட்டதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால் எந்த அளவுக்கு அவரை வெறுக்கிறார்கள் என்று பாருங்கள்.

ரசிகர் ஒருவர் தெரிவித்த விஷயத்தை பார்த்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த ரசிகர் ட்விட்டரில் காஜலிடம் கூறியிருப்பதாவது, நீங்கள் பிக் பாஸ் ஹவுஸுக்கு போனீங்கன்னா சாக்ஷி ஸ்வீட்னு நினைத்துக் கொண்டிருக்கிறாங்க அது பாம்புன்னு புரிய வையுங்க..மேலும் இந்த கேள்வியும் கேளுங்க...2011ம் ஆண்டு அவருக்கு திருமணமாகி விவாகரத்தானதாக நெட்டில் இருக்கு...இது உண்மை என்றால் முதல் வாரம் லைஃப் பார்ட்னர் கேள்வி வந்தப்போ ஏன் அதை பத்தி சொல்லல? இதை மறக்காமல் கேளுங்க என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டிற்கு வரும் முன்பே அபிராமிக்கு மீரா மிதுனை தெரியும். ஆனால் அவரை தெரியாதது போன்று நடிக்கிறார் அபிராமி. இந்நிலையில் அபிராமியின் நடிப்பை பார்த்து கலாய்த்துள்ளார் காஜல். காஜல் மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் அபிராமியை சுத்தமாக பிடிக்கவில்லை.

55792 total views