பிக்பாஸ் வீட்டில் கமல் வெளியிட்ட முதல் குறும்படம் இதுதான்.. அதிர்ச்சியில் சாக்‌ஷி, மீரா..!

Report
570Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் அரங்கேறியது. ஆனால், இதுவரை எந்த ஒரு குறும்படமும் வராதது ரசிகர்களுக்கு மிகப் பெரிய வருத்தமாகவே உள்ளது.

மூன்று வாரங்கள் ஆன நிலையில் தற்போது பிக் பாஸில் முதல் குறும்படம் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. அதுவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வரும் சாக்க்ஷியின் குறும்படம் தான் அது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக் டிக் டிக் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் சாண்டி மற்றும் மீரா மிதுன் பங்கேற்ற சாண்டி மீராவிடம், கவின் இந்த டாஸ்கில் உன்னுடைய பங்கு எதுவுமே இல்லை என்றும் எல்லாமே சாண்டி தான் செய்தார் என்றும் கூறியது மீராவை மிகவும் பாதித்தது.

இதனால் மற்ற போட்டியாளர்களிடம் புலம்பிய மீரா, எப்போதும் சண்டை தான் அனைத்தையும் செய்தது போல பெருமையை ஏற்றுக் கொள்கிறார் என்று கூறி இருந்தார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த அப்போதைய தலைவரான சாக்ஷி உனக்கு வேண்டுமென்றால் நான் அனைவரையும் அழைத்து ஒரு மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்கிறேன். நீ அனைவருக்கும் முன்பு சாண்டியிடம் செய்கிறேன். கேட்டுகொள் என்றார்.

இதன் பின்னரே மீரா இதற்கு ஒப்புக்கொண்டு அனைவரையும் அழைத்து மீட்டிங்கில் பேசினார். இதனால் கடுப்பான கவின் மற்றும் சாண்டி, மீராவிடம் உனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் நேரடியாக சொல்லியிருக்கலாமே எதற்காக தேவையில்லாமல் இந்த மீட்டிங் ஏற்பாடு செய்தார் என்று கோபித்துக் கொண்டனர்.

சாக்க்ஷிக்கு ஆதரவாக ரேஷ்மா ஷெரின் ஆகியோரும் நீதான் மீட்டிங் ஏற்பாடு செய்தாய் என்று மீராவிடம் வாதாடினார். இதனால் குழம்பிய மீரா ஒரு வேளை நாம் தான் மீட்டிங் ஏற்பாடு செய்து செய்யச் சொன்னோம் என்று நினைத்து விட்டார்.

ஆனால், உண்மையில் சாக்க்ஷி தான் இந்த மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார். சாக்க்ஷி கூறிய பொய்யை வெளிக்காட்ட இன்று கமல் குறும்படம் ஒன்றை போட்டு காண்பித்துள்ளார். சாக்‌ஷி கூறியபொய்யை கமல் வன்மையாக கண்டித்துள்ளாராம்.

19941 total views